அறிவமுது: ‘தரம் அறிய லேபிள்!’
http://mazalaipiriyan.blogspot.com/2013/06/blog-post_26.html
இப்போதெல்லாம் காய்கறி பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ‘பார்கோடை’ வைத்து அதன் தரத்தை அறிந்துகொள்ள முடியும்.
3 அல்லது 4 என்ற எண்ணில் அதாவது 3011 மற்றும் 4011 ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் பூச்சிமருந்துகள் தெளித்து வளர்க்கபட்டவை என்று பொருள்.
8 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து இலக்க எண்களைக் கொண்டிருந்தால் அதாவது 84011 - அதை ‘ஆர்கானிக்’ பழங்கள் என்று சொல்லி அதிக விலைக்கு விற்பார்கள். ஆனால் உண்மையில் அவை மரபணு மாற்றிய காய் மற்றும் பழங்களாகும்.
உண்மையில், 9 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் ஐந்து இலக்க எண்கள் அதாவது 94011 கொண்டவைதான் ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட பழங்களாகும்.
3011 மற்றும் 4011 எண்கள் கொண்ட பழங்கள் மெழுகு பூச்சு பூசப்பட்டிருப்பவை.
பழங்கள் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் பசைகூட சாப்பிடும் ரகம்தான்! ஆனால், ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுப்பவை. எச்சரிக்கை!
அதேபோல, பழங்களை வாங்கும்போது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை விலக்கிப் பாருங்கள். ஒருவேளை அதன் அடிப்பகுதியில் நகக் கீறல் அடையாளம் இருந்தால் அது கடைக்காரரால் மாற்றி ஒட்டப்பட்டது என்று பொருள்!