அன்ஸாரிகள்: அன்பு நபிகளார் மக்காவைத் துறந்து, மதீனாவுக்கு ஹிஜ்ரத் - நாடு துறந்து - சென்றனர். அப்போது, அவர்களுக்கும் அவர்களுடன் அங்கு சென்ற தோழர்களுக்கும் எல்லாவிதமான உதவிகளும் செய்து ஒத்துழைப்பு நல்கினர் மதீனாவாசிகள். இந்த அரும்பண்பு கொண்ட முஸ்லிம் தோழர்கள் 'அன்ஸாரிகள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.