நாளொன்று கற்போம்: "அல்லாஹீ அக்பர்!"
http://mazalaipiriyan.blogspot.com/2013/09/blog-post_24.html
“தினமும் பள்ளிவாசலிலிருந்து
“அல்லாஹீ அக்பர்”னு சத்தம் வருதே.. அப்படின்னா என்ன வாப்பா?”
கேள்விக் கேட்ட
குட்டிக் கண்ணனை மடியில் அமர்த்திக் கொண்டு அன்வர் சொன்னார்: “செல்லம்! இதை 'அஜான்' அல்லது
'பாங்கு' என்பார்கள் மகனே! அதாவது தொழுகைக்காக ஒரு நாளில் ஐந்து முறை விடுக்கும் தொழுகைக்கான
அழைப்பு.
- இறைவன் ரொம்பவும் பெரியவன்.
- அவனைத் தவிர வணக்குத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை!
- முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்.
- தொழ வாருங்கள்..!
- தொழுகையின் மூலம் பயபக்தியுள்ள நல்ல மனிதனாகி வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் வாருங்கள்!
- என்பதுதான் இதன்
பொருள் மகனே!"
அன்வரைக் கட்டி
அணைத்துக் கொண்டான் கண்ணன்,
“ரொம்பவும் நன்றி வாப்பா!” என்றான்.
அங்கு வந்த அவனுடைய அம்மா எதிர்வீட்டு லட்சுமியிடம் தான் கற்றுக் கொண்டதை சொல்ல ஓடினான்.
“ரொம்பவும் நன்றி வாப்பா!” என்றான்.
அங்கு வந்த அவனுடைய அம்மா எதிர்வீட்டு லட்சுமியிடம் தான் கற்றுக் கொண்டதை சொல்ல ஓடினான்.