விழிகள்:'தவிட்டிலிருந்து எரிவாயு'
http://mazalaipiriyan.blogspot.com/2013/09/blog-post_26.html
கடலூரை
சேர்ந்த இவரது பெயர் நாகராஜன். சிதம்பரத்தில் MSC.,
Software Engineering இறுதியாண்டு
மாணவர். "அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?" இவருடைய கண்டுபிடிப்பு ஒரு
மகத்தான வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
அதென்ன கண்டுபிடிப்பு?
பெரிசா ஒன்றுமில்லை.. ஆயிரத்தைத் தொடும் சமையல் எரிவாயுவை இவர் அலட்சியமாக தவிட்டிலிருந்து தயாரிக்க முடியும்
என்று நிரூபித்திருக்கிறார்.
மிக எளிய உபகரணம்
அது.
இரண்டு பக்கம்
அடைக்கப்பட்ட ஒரு தகர டப்பா.
அதில் தவிட்டைப் போடுகிறார்.
பிறகு அந்த டப்பாவை மூடிவிட்டு அதை சூடுபடுத்துகிறார்.
இதனால் உருவாகும் எரிவாயு அந்த டப்பாவிலிருந்து ஒரு சிறிய குழாய்
மூலமாக வெளியேற்றப்படுகிறது!
அந்த வாயுவை தீக்குச்சியால் பற்ற வைக்கும்போது, கரும் நீல
நிறத்தில் சமையல் எரிவாயுவைப் போலவே
தீப்பற்றி எரிகிறது. 'இப்படி வெளிப்படும் எரிவாயுவை சிலிண்டர்களில்
அடைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்த முடியும்!’
-என்கிறார் நாகராஜன்.
ஒரு முக்கிய செய்தி; அது, சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக புதிய எரிவாயுவை கண்டுப்பிடித்திருக்கும் நாகராஜன்
ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.