சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: கலீஃபா..'கலீஃபா:  இஸ்லாமிய குடியரசின் தலைவர். திருக்குர்ஆன் மற்றும் திருநபியின் போதனைகளின்படி ஆட்சி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் தலைவர் - ஜனாதிபதி.

மஹர்: மணமகன், மனமகளுக்குக் கட்டாயமாக வழங்க வேண்டிய திருமண அன்பளிப்பு. மணமகளுக்குச் சொந்தமான உடமை. அவரது விருப்பப்படி அதை பயன்படுத்தலாம்.

ஹிஜ்ரி: இஸ்லாமிய ஆண்டு. நபிகளார் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற நிகழ்வு ஹிஜ்ரத் எனப்படுகிறது. அது நிகழ்ந்த காலம் இஸ்லாமிய ஆண்டின் துவக்கமாக கணக்கிடப்படுகிறது.

ரலி: 'ரலியல்லாஹீ அன்ஹீ' - என்பதன் சுருக்கம். "இறைவன் இவரைக் குறித்து திருப்தியடைவானாக! அன்னார் மீது இறையருள் பொழிவானாக!" என்பதன் பொருள்.

ரஹ்: 'ரஹ்மதுல்லாஹி அலைஹி' என்பதன் சுருக்கம். "இறைவன் இவர் மீது அருள் பொழிவானாக!" - என்று செய்யப்படும் பிரார்த்தனை.

லா இலாஹா இல்லல்லாஹ்: "வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை!" - என்று பொருள் தருவது.

ஹராம்: இஸ்லாம் தடை செய்துள்ள அனைத்தும் ஹராம் எனப்படும்.

ஹலால்: இஸ்லாம் அனுமதித்த அனைத்தும் ஹலால் எனப்படும்.

Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 1041696751072794070

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress