குழந்தை இலக்கியம்: 'தலைநிமிர்ந்து பெருமைப்படும் காலம் வரும்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_19.html
“மகனே! நீ எனக்கு
ஒத்துழைப்புக் கொடுத்தால் இருவருமாய் சேர்ந்து நாம் நமது நிலத்தில் நல்ல முறையல் விவசாயம்
செய்து வளமையுடன் வாழலாம்.
ஆனால், நீயோ ஏதோ
கண்டுபிடிப்புகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். இதில் உனக்குக் கிடைக்கவிருக்கும்
வெற்றி எளிதானதும் அல்ல. நிச்சயமானதும் அல்ல என்பதை மட்டும் மறந்துவிடாதே!” – என்று
கவலையுடன் அந்த தந்தை தனது மகனுக்கு ஆலோசனை தரலானார்.
கலங்கி நிற்கும்
தந்தையின் கரங்களை இரு கைகளால் ஏந்திக் கொண்டார். பிரேமை, பெரு மதிப்பு, அக்கறை இவை கலந்து அந்த மகன் ஆறுதல் சொன்னார்: "அப்பா,
நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உள்ளது. நீங்கள் என்னைக் குறித்து
கவலைப்பட வேண்டாம் எனதருமை தந்தையே! நீங்கள் என்னைப் பார்த்து தலைநிமிர்ந்து பெருமைப்படும்
காலம் ஒன்று வரத்தான் போகிறது. என்னை வாழ்த்துங்களப்பா!”
இனி மகனின் கனவுகளுக்கு
தடை போடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று புரிந்து கொண்டார் அவருடைய தந்தையார். அரை
குறை மனதுடனேயே தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அமெரிக்க வருங்கால வரலாற்றில் ஒரு
சாதனை நாயகனுக்கான வாழத்துக்கள் அவை என்பது பாவம்! அந்த தந்தைக்கு தெரிய வாய்ப்பில்லைதான்!
தொழில் சம்பந்தமாக
எந்தவிதமான கல்வி அறிவோ, முன்னனுபவங்களோ இல்லாத ஒரு குடியானவனின் மகனுக்கு மனம் நிறைய
நம்பிக்கை இருந்தது. அவருடன் கல்வி கற்ற இளைஞர்கள் எல்லாம் கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த இளைஞரோ அந்த சம்பாதியவான்களை தனக்குக் கீழாக பணிக்கமர்த்திக் கொள்ள முடியும் என்று நினைத்தார்.
அவருக்கு பிசினஸ்
என்றால் என்னவென்று தெரியாது, ஆனால் தன்னால் அவற்றைக் கற்று கொள்ள முடியும் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.
அவருடன் படித்த
இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்தபோது, அவரால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாள்
அவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு, தன்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை
அவரிடம் பலமாகவே இருந்தது. கடைசியில் அவருடைய நினைப்புகள்.. கனவுகள் எல்லாம் நனவுகளாகின.
அவர் யார் என்று
தெரியுமா? அவர் தான் ‘ஹென்றி போர்ட்’,
போர்ட் வாகன நிறுவனத்தின் அதிபர்.
உலகில் எல்லோரும்
பயன்படுத்தும்விதமாக மலிவு விலையில் காரை தயாரிப்பதாக அவர் சூளுரைத்திருந்தார். அதேபோல, 1903 – ஆம்,
ஆண்டு T19 என்ற வடிவமைப்பில் கார் தயாரித்து வெறும் 280 டாலருக்கு விற்பனை செய்யவும்
ஆரம்பித்துவிட்டார். இதனால் மூக்கில்
விரலை வைத்து உலகம் வியந்து நின்றது. அந்த வடிவ காரின் விற்பனை எவ்வளவு தெரியுமா? ஒரு
கோடியே ஐம்பைதைந்து லட்சம்! அதுவும் அமெரிக்காவில் மட்டும் விற்பனையான தொகை இது.
ஹென்றி போர்ட்டின்
வாழ்க்கையிலிருந்து நாம் கற்க வேண்டிய ஒரு ஐந்து அம்சங்கள் இவை:
1. நம்மால் முடியும்..
ஆம்! நிச்சயம் முடியும்.
2. ஏச்சு – பேச்சுகளைக்
கண்டு லட்சியத்திலிருந்து பின்வாங்கவே கூடாது.
3.தோல்வி என்பது
ஒரு பாடம் மட்டுமே! எல்லோருடைய கருத்துக்களையும் செவிமடுத்துக் கேள். அவற்றிலிருந்து
மிகச் சிறந்தவற்றை ஏற்றுக் கொள்.
4.தோல்வியைக் கண்டதும்
துவள வேண்டாம். இன்னும் முனைப்புடன் வெற்றியை நோக்கி நகருங்கள்.
5. சிறந்த நிறுவனம்
என்பது உலகின் அன்றைய தேவையை அறிந்து உற்பத்தி செய்வதுதான்!