குழந்தை வளர்ப்பு -13 : 'உயிர்ப்பூட்டும் அந்த சொல்!'



“லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் – இல்லை இறைவன் ஒருவனைத் தவிர.. முஹம்மது நபிகள் இறைவனின் தூதர்!” – என்ற இரண்டு சொற்றொடரான ‘கலிமா’ வின் முழுமையான பொருள் என்ன?
 
கலிமாவின் ‘இலாஹ்’ என்ற வார்த்தைக்கு ‘இறைவன்’ என்று பொருள் அதாவது இந்தக் கலிமாவை உறுதிப் பிரமாணம்’ எடுக்கும்போது நாம் சொல்வது இதுதான்:

இறைவனைக் குறிக்கும் இந்த இலாஹ் என்ற சொல்,

  • உரிமையாளன்
  • ஆணையாளன்
  • படைப்பாளன்
  • பரிபாலிப்பவன்
  • பிரார்த்தனைக் கேட்பவன்
  • பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவன் போன்ற நீண்ட பொருட்களை தன்னுள் அடக்கியது.
இப்படிப்பட்ட குணாம்சங்கள், தன்மைகள் கொண்ட இறைவன்தான் இந்த உலகத்தில் வணங்குவதற்குத் தகுதியுடையவன்.

இறைவன்தான் உலகத்தைப் படைத்தவன். மனிதர்களும், அவர்களுடைய வாழ்க்கை – வசதிகளும் இறைவனுக்கே உரியவை. உலகையும், மனிதனையும் படைத்ததோடு நில்லாமல் மனிதர்கள் வாழ அனைத்துத் தேவைகளையும் ஏற்படுத்தித் தந்தவன் இறைவன்தான்! அவன் வாழ்வும், மரணமும் தருகிறான். நல்லதும், கெட்டதும் அவன் தரப்பிலிருந்தே வருகின்றன. அவன்தான் மனிதர்களின் எஜமானன். அவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை. அவனுடைய ராஜாங்கமே இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கிறது. அதன் ஒரு பகுதிக்கு உட்பட்டதே மனித வாழ்க்கைக்கான சட்டங்களும். அந்தச் சட்டங்களைப் பின்பற்றினால்தான் மனிதன் அமைதியைப் பெற முடியும். 

இஸ்லாம் என்பது இறைவனின் சட்டதிட்டங்கள். இறைவன் மனிதர்களுக்கு அளித்த வாழ்வியல் திட்டம். இத்தகைய தொகுப்பான செய்திகளைத் தாங்கியுள்ளதே கலிமாவின் முதற்பகுதி.

கலிமாவின் அடுத்த பகுதி, ‘முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் – முஹம்மது நபி இறைவனின் தூதர்.

  • இறைவனின் கட்டளைகள் யாவை? இறைவனின் மகிழ்ச்சிக்குரிய செயல்கள் யாவை?
  • இறைவனின் கோபத்திற்குரிய செயல்கள் யாவை?
  • இந்த உலக முடிவுநாள்வரை மனிதன் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் என்னென்ன?
இவை போன்ற தெள்ளத் தெளிவான பதில்களுடன் அனுப்பப்பட்ட போதகரே முஹம்மது நபிகளார். எந்தச் செய்திகளை அவர் போதித்தாரோ அவற்றின்படி வாழ்ந்தும் காட்டியவர். இறைவனின் திருச்செய்திக்கு முன்மாதிரி. மனித வாழ்வின் அனைத்துத்துறைகளுக்கும் வழிகாட்டி. உலக முடிவுநாள்வரை மனித வாழ்வின் அனைத்துத் துறை சார்ந்த ஒரே தலைவர். 

இவ்வளவு உட்பொருட்களைக் கொண்ட கலிமாவை ஏறறுக்’ கொண்ட பிறகு, அவற்றைச் செயல்படுத்தாவிட்டால்.. நம்மைவிட ‘மோசக்காரர் – ஏமாற்றுப்பேர்வழி’ வேறு யாரும் இருக்க முடியாது.

நபிகளார் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அருளிய சட்ட திட்டங்களே இம்மை – மறுமை ஈருலக வாழ்விலும் மோட்சம் தருபவையாகும். இதை உறுதியாக நம்பித்தான் கலிமா என்னும் உறுதிமொழி ஏற்கிறோம். ‘ஒப்புக் கொண்டது ஒன்று. செயலோ மற்றொன்று’ – என்று இருந்தால் எப்படி? ஒப்புக் கொண்ட இந்தக் கலிமாவின் அடிப்படையில்தான் ஒருவர் ‘முஸ்லிம்’ என்னும் பெயரை அதாவது ‘இறைவனின் அடிமை’ என்னும் பெயரைப் பெறுகிறார். முஸ்லிம் சமுதாயத்தின் ஓர் அங்கமாகிறார். ஷரீயத் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார். 

அதனால், குழந்தைகள் தமது மழலை மொழியில் பேச்சைத் துவங்கியதும் அவர்களுக்கு கலிமா தய்யிபா பிரமாணத்தைக் கற்றுத் தர ஆரம்பித்து விட வேண்டும். 

“லா இலாஹா இல்லல்லாஹ்!’ – என்று யார் இதய பூர்வமாக மொழிகிறாரோ அவர் நரக நெருப்பிலிருந்து தடுக்கப்பட்டுவிடுகிறார்.” (புகாரி) என்ற நபிமொழியின் செய்தி இதுதான்.

வெறும் வாய் மொழியில் எதையும் அடைய முடியாது. செயல்முறையில் தான் வெற்றி பெற முடியும். குறைந்தது மனத்தாலாவது அந்த செயல் திட்டத்தை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். 

உண்மையில் கலிமா என்பது இறைவனுடன் நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை. இறைவன் மனிதர்களுக்காகத் தயார் செய்துள்ள 'அஜெண்டா – செயல்திட்டம்'. இதைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக மேற்கொள்ளப்படும் உறுதிமொழியே கலிமா.

கலிமாவின் மூலமாக இஸ்லாத்தை ஒப்புக் கொண்டு அதைச் செயல்படுத்தவில்லை என்றால் நட்டம் மனிதனுக்குதான்; இறைவனுக்கல்ல. இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள யாவும் ‘அமானிதப் பொருட்கள்’ அதாவது அடைகலப் பொருட்கள்.

உடல் அவையங்களிலிருந்து.. வாழ்க்கைச் சாதனங்கள்வரை அனைத்தும் இறைவன் தரப்பிலிருந்து மனிதனுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள்தாம்! “எனது.. உனது..” – என்று சொந்தம் கொண்டாட இங்கே எதுவுமே இல்லை.

- தொடரும்.

Related

குழந்தை வளர்ப்பு 2259139169882262447

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress