அறிவமுது:'ஹாஸ்டல் அறையில் தொடங்கிய நிறுவனம்!'

 

'ஷெல்' என்பது அப்பெண்மணியின் பெயர். வயது முப்பத்தேழு. அமெரிக்க பெரும் நிறுவனமொன்றில் நல்ல பதவியில் இருப்பவர்.

ஒருநாள் அலுவலகத்தில் தம் பணியொன்றில் தவறிழைத்து விட்டார். அதனால் நிறுவனத்துக்கு பல லட்சம் டாலர் இழப்பு!

தன் தவறுக்கு வருந்தியவாறு தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் நடந்ததைச் சொன்னார். 

வேறொரு நிறுவனமாக இருந்திருந்தால் ஷெல்லுக்கு இந்நேரம் சீட்டு கிழிந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 

ஷெல்லின் தவறை பொறுமையுடன் கேட்ட அவருடைய முதலாளி புன்னகைத்தவாறு, "அப்படியா..? நன்றி!" - என்றவர் தொடர்ந்து  சொன்னார்: ".. தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் போல இருப்பவர்கள்தான் தவறுகளை செய்ய மாட்டார்கள். தடுக்கி விழுபவர்களால்தான் எழுந்து நிற்க முடியும். அத்தகைய ஆட்களே நம் நிறுவனத்துக்குத் தேவை. அவர்களால்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடி வெல்ல முடியும்!" என்றார் அமைதியுடன்.

இப்படிப்பட்ட வேறுபட்ட சிந்தனை கொண்ட நிறுவனம்தான் கூகுள். அந்த விநோதமான முதலாளிதான் 'லாரி பேஜ்'. தன் தோழர் 'செர்ஜி ப்ன்'னுடன் சேர்ந்து கல்லூரி நாட்களிலேயே இந்த நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டார். அடுத்த எட்டு ஆண்டுகளில் உலகின் முதல் தர இணையதள நிறுவனமாக பெரும் விருட்சமாக வளர்ந்து விட்டது கூகுள்.

ஆரம்பத்தில், லாரியும், செர்ஜியும் பீட்ஸாவை விநியோகம் செய்து சம்பாதித்த பணத்தில் மிச்சம் பிடித்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கி தங்கள் ஹாஸ்டல் அறையிலேயே நிறுவனத்தை தொடங்கினார்கள். பிறகு ஒரு வீடொன்றின் 'கார் ஷெட்டை' வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் நிறுவனத்தை விரிவுப்படுத்தினார்கள்.

இப்படி வளர்ந்த கூகுளின் இன்றைய மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கும் அதிகம். 

கணிதத்தில் 'கூகால்' (googol) என்ற ஒரு பெரிய எண் உண்டு. ஒன்று போட்டு நூறு சைபர் போட வேண்டும்.

இந்த பெயரைதான் லாரியும், செர்ஜியும் தங்கள் நிறுவனத்துக்கு சூட்டினார்கள். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் அவற்றை சுலமாகத் தேடித் தந்துவிடுவோம் என்ற பொருளில்தான் இப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தவறுதலாக எழுத்துப் பிழையாக 'Googol' பதிலாக, 'Google' என்று எழுதிவிட அந்த பெயரே அதன் பின் நிலைத்துவிட்டது. நிறுவனத்தைத் தொடங்கி அதை Yahoo போன்ற பெரும் நிறுவனங்களுக்குதான் விற்கத் திட்டம். ஆனால், யாரும் வாங்க முன்வராததால் 1998-இல், 'Google' வடிவமைப்பு பெற்றது. 

1998 நவம்பரில்தான் கூகுள் தளிர் நடை பயில ஆரமபித்தது. எந்த வருமானமும் அப்போது இல்லை என்ற நிலை. 'Sun', 'IBM' போன்ற நிறுவனங்கள் கூகுள் பயன்படுத்தும் சர்வர்களை இலவசமாக வழங்கியிருந்தன. 

2001-ல், 'யாகூ', 'கூகுளை' வாங்க விலைப் பேசியதாகவும், தேடல் இயந்திரத்துக்கு விலை 5 பில்லியன் டாலர்களா? அம்மாடியோவ்!" - என்று ஒதுங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

தற்போது கூகுள் நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் வேலையை நேசிக்கும் பொறியாளார்கள். கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் கூகுளின் அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைப்பவர்கள் ஏதோ பல்கலைக்கழக கட்டடிடத்துக்குள் தடம் மாறி வந்து விட்டோமா என்று திகைத்து நிற்பார்கள். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போல, கல கலவென்று இருக்கும். பணியாளர்கள் தங்கள் செல்ல நாய்களுடன் வலம் வருவதும், மற்றொரு புறம் சிலர் டேபிள் டென்னீஸ் விளையாடிக் கொண்டிருப்பதும், தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாய் ஒரு நம்ப முடியாத சூழல் காணப்படும். பணியாளர்களுக்கான அத்தனை வசதிகளோடு கூகுள் கம்பீரமாய் நிற்கிறது.

கூகுள் ஆரம்பத்தில் 'சர்ச் எஞ்சின்' தேடல் பொறியாககத்தான் இருந்தது. இந்த மின்னல் வேகத் தேடல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள் லாரியும், செர்ஜியும்தான். இதற்காக அவர்கள் பெரிய, பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எவற்றையும் பயன்படுத்தவில்லை. சாதாரணமாகக் காய்லான் கடைகளில் கிடைக்கும் ஓட்டை கம்ப்யூட்டர்களை ஏராளமாக வாங்கி அவற்றை செப்பனிட்டு, பயன்படுத்தும் விதமான 'சாப்ட்வேர் - மென்பொருள்' சாணக்கியத்தை நிறுவினார்கள்.

கூகுள் நிறுவனப் பணியார்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை. ஐந்தாவது நாள், புதிய சிந்தனைகளை சிந்தித்து வடிவெடுக்க வசதியாக நிறுவன செலவிலேயெ எல்லா வசதிகளும் செய்து அந்த நாளை அவர்களுக்காக ஒதுக்கி விடுகிறார்கள். கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி பணியாளர்களின் சிந்தனைகளிலிருந்து உருவெடுத்தவைதான். 

"ஒவ்வெரு யோசனையும், கண்டுபிடிப்பும் ஒரு வைரம்! நான் பணியில் மும்முரமாக இருக்கிறேன். எனவே சிந்திக்க நேரமில்லை!' - என்று எந்த நல்ல சிந்தனையும் செயல்வடிவம்  பெறாமல் போய்விடக் கூடாது!" - என்பதே கூகுளின் கொள்கை.

பல தேடு பொறிகள் இருந்தாலும், கூகுள்தான் முதன் முதலில் பக்கங்களை மதிப்பெண்கூடிய தரத்தோடு பயனுள்ள தகவல்களை தருகிறது என்பது முக்கியமானது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் லாரி பேஜ். கூகுள் ஆய்வுகூடம் புதிது புதிதாக பல கண்டுபிடிப்புகளை தந்து கொண்டியிருக்கிறது. 

கூகுள் நியூஸ் என்பது உலகின் செய்திகள் அத்தனையையும் ஒரே இடத்தில் தருகிறது. கூகுள் மேப், நீங்கள் நிற்கும் இடம் முதற்கொண்டு உங்களுக்கு வழிகாட்டும். அதேபோல, லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி - நூலகமும் உண்டு. செயற்கைக்கோள் வழியே உங்கள் வீட்டு மொட்டை மாடியையும் பார்க்க முடியும். கூகுள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்களை அறிய முடியும். 'கூகுள் செவ்வாய்' என்ற பக்கத்தில் செவ்வாய் கிரகத்தின் அழகிய புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் வலைப்பூ ஒன்றை அமைக்கலாம். 'ஜி மெயில்' என்ற பெயரில் மின்னஞ்சல் சேவை வேறு. அத்துடன் ஆயிரம் எம்.பி. இலவசம் என்று ஆரம்பித்து இரண்டாயிரத்தைத் தாண்டி சேமிக்கும் வசதி. தேவையற்றவைகளை வடிகட்டும் விதமாக வடிப்பான்கள்.

இப்படி விரிந்து, பரந்த கூகுளின் சேவைகள்.

கூகுளின் 450,000 சர்வர்களை இயக்க 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவைப்படுகிறது அதாவது  மாதம்தோறும்  கூகுள் கட்ட வேண்டிய பில் எவ்வளவு தெரியுமா?  மில்லியன்கள் டாலர்கள்!

Related

அறிவமுது 6729988711017364350

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress