அறிவமுது:'விண்ணாய்வு'

விண்மீன்களால் ஜொலிக்கும் கூரையாய் தெரியும் இரவு நேர வானத்தை மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக உற்று நோக்கியவனாகவே இருந்தான். 

இது விண்ணாய்வு அல்லது வானவியல் எனப்பட்டது.

ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்தான் ஒரு பிரத்யேக கருவி, விண்ணாய்வை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர்தான் 'டெலஸ்கோப்' அதாவது தொலைநோக்கி.

1543-ல், போலந்தைச் சேர்ந்த வானவியல் அறிஞர் நிகோலஸ் கோபர் நிகஸ் பூமியும் ஒரு கிரகம் என்று கண்டுபிடித்தார். மற்ற கிரகங்களைப் போலவே பூமியும் சூரியனைச் சுற்றிவருவதாக கூறி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கினார். ஏனென்றால் பூமி பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்று அதுவரை ஒரு கருத்து நிலவிவந்தது. 

இத்தாலியைச் சேர்ந்த வானவியல் அறிஞர் கலிலியோ 1609-ல், எளிமையான ஒரு  தொலைநோக்கியை கண்டுபிடித்தார். கோபர் நிகஸ்ஸின் கூற்று உண்மை என்று நிரூபித்தார்.
இந்த ஆய்வின் தொடர்ச்சியாக தற்போது மகா தொலைநோக்கி ஒன்றை விண்ணில் நிறுவியிருக்கிறோம்.

அதன் பெயர் 'ஹப்புள்' என்பதாகும் அதாவது 'Hubble Space Telescope (HST). இது ஒரு பள்ளி பேருந்து அளவு பெரிதானது. பூமியிலிருந்து 600 கி.மீ. அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஒரு ரிமோட் கருவி மூலமாக பூமியிலிருந்து இயக்க வல்லது.

Related

அறிவமுது 7630816976583693656

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress