குழந்தை இலக்கியம்: பாடல் - "இறைவன் மகா பெரியவன்!"
http://mazalaipiriyan.blogspot.com/2013/07/blog-post_22.html
"நாரே தக்பீர்..!
அல்லாஹீ அக்பர்..!
நாரே தக்பீர்..!
அல்லாஹீ அக்பர்..!
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு இணையற்றவன்..
படைப்பினத்தின் தலைவனவன்!
பிரபஞ்சத்தின் அதிபதி!
எல்லோருக்கும் எஜமானன்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்
..... நாரே தக்பீர்..
வெறுமையிலிருந்து மனிதனைப் படைத்தான்..
மண்ணிலிருந்து 'ஆதமைப்' படைத்தான்..
"குன்" என்னும் சொல்லைக் கொண்டு..
"ஆகுக..!" என்றே படைத்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
..... நாரே தக்பீர்..
சிந்திக்கும் திறனை அளித்துச்
'சுய சுதந்திரம்' தந்தான்..!
'கலீஃபா'வாக நியமித்து..
'பிரதிநிதித்துவம்' தந்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
..... நாரே தக்பீர்..
சட்டங்களைத் தந்தவன்..
உலகம் சீராய் இயங்க..
சட்டங்களைத் தந்தான்..
மனிதன் நேராய் வாழ..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
..... நாரே தக்பீர்..
'தூதர்கள்' என்னும் புனிதர்களை
மக்களிலிருந்தே தேர்ந்தெடுத்தான்..!
'வேதங்கள்' என்னும் வழிகாட்டுதலை..
போதிக்க அவர்களைப் பணித்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
..... நாரே தக்பீர்..
ஒவ்வொரு மனித இனத்திலும்..
உலகின் ஒவ்வொரு மூலையிலும்..
தூதர்களை அனுப்பி..
நேர்வழிப் போதிக்க பணித்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
..... நாரே தக்பீர்..
ஆதம்.. நூஹ்.. இத்ரீஸ் நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
இப்ராஹீம்.. இஸ்மாயீல் .. இஸ்ஹாக் நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
யூனுஸ்.. மூஸா.. ஈஸா நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
இறுதித்தூதர் முஹம்மது நபிகள்..
போதித்ததெல்லாம் இதுதான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!"
..... நாரே தக்பீர்..
- சின்னக்குயில்.