நாளொன்று கற்போம், சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: "அமானத்"
http://mazalaipiriyan.blogspot.com/2013/07/blog-post_27.html
"அமானத்", நம்பி ஒப்படைக்கப்பட்டது என்று இதன் பொருள்.
இது விரிவான கருத்துக்கள் கொண்ட ஒரு சொல்லாகும்.
இறைவன் தன் அடியார்களிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகள், திறமைகள், காலம், இளமை போன்றவையும் இதில் அடங்கும்.
ஒட்டு மொத்த சமுதாயமோ அல்லது தனிநபரோ ஒரு மனிதரிடம் ஒப்படைத்திருப்பவையும் இதில் அடங்கும்.
அவை பொருட்களானாலும், பொறுப்புகளானாலும் சரியே!