குழந்தை இலக்கியம்: அனைத்திலும் அவர்கள்தானே?
http://mazalaipiriyan.blogspot.com/2013/11/blog-post_3.html
வேர்களாய்..
நாமானபின்
விழுதுகள்
அவர்கள்தானே?
சுமை சுமக்கும்
தோள்களின்
நாளைய -
சுமைதாங்கிகள்
அவர்கள்தானே?
நிஜங்களின்
நிழல்களாய்
நிழல்களின்
நிஜங்களாயும்
உருவெடுப்பது
அவர்கள்தானே?
காலத்தின்
சுழற்சியில்
மறுமைநாள்வரையிலான
யுகம்தோறும்
மூதாதையர் பொன்னேட்டில்
தடம் பதிப்பதும்
அவர்கள்தானே?
அதனால்,
தோளுக்கு
நல்ல தோழராய்
வில்லின் இலக்கு காட்டும்
கூர் பார்வையாய்
சொல்லை வடிவெடுத்து தரும்
நல்ல சிற்பியாய்
நேர்பாதையைக் காட்டும்
கலங்கரை விளக்காய் .. மட்டும்.....
ஆம்.. மட்டும்..
இருப்போம் நாம்!
- ‘சின்னக்குயில்’